ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளியான 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் உலக அளவில் ஹிட்டானது.. இந்தப்படம் வெளியானபோது இந்தப்பாடல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் அப்போது ஓணம் சமயம் என்பதால் கேரளாவை சேர்ந்த ஷெரில் என்பவர் தான் நடத்திவரும் நடனக்குழு மூலம் ஓணம் கொண்டாட்ட பாடலாக மாற்றி, இதற்கு நடனமாடி அதை சோஷியல் மீடியாவில் வெளியிட, பாடலும் சூப்பர் ஹிட்டானது. ஷெரிலும் ஒரே நாளில் பாப்புலாரானார். அதன்பின் 'தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கூட ஒரு பாடலில் நடனம் ஆடினார்.
தற்போது ஷெரிலுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. பிரபுல் டோமி அமம்துரத்தில் என்பவரைத்தான் அவர் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.