டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் அனிதா என்ற கேரக்டரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரித்து வர்மா. அதையடுத்து கலையரசனுடன் சைனா, விக்ரமுடன் துருவநட்சத்திரம், துல்கர்சல்மானுடன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கவுதம் மேனனின் துருவநட்சத்திரத்தில் தனது ரோல் குறித்து ரித்துவர்மா கூறுகையில், கவுதம் மேனன் படம் என்றதும் ஆர்வமாக கமிட்டானேன். அவரது படங்களில் ஆர்ட்டிஸ்டுகளை ஸ்டைலிசாக காண்பிப்பார். நான் எதிர்பார்த்தது போலவே இந்த படத்தில் என்னை ஸ்டைலாக நடிக்க வைத்திருக்கிறார். கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் என்னை நடிக்க வைத்திருக்கிறார். எனது ரோல் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்கிறார் ரித்து வர்மா.