ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் 'கண்ணே கலைமானே' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடைபெற்றன. தற்போது அந்த வேலைகளும் முடிவடைந்து விட்டநிலையில். விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அட்லியின் உதவியாளர் ஈனாக் என்ற அறிமுக இயக்குநரின் படத்தில் நடிக்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக 'மேயாத மான்' படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர் மற்றும் அதே படத்தில் வைபவ்வின் தங்கையாக நடித்த இந்துஜா ஆகிய இரவரும் நடிக்க இருக்கிறார்கள். சினிமா ஸ்டிரைக் முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.
இந்தப்படத்தில் உதயநிதியின் அப்பாவாக கார்த்திக் நடிக்கிறார் என்பது உப தகவல். புதிய தகவல். இந்தப் படத்தில் மலையாள நடிகரான ஜெயராம் தற்போது ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.