ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் மாதவனின் மகன் வேதாந்த். நீச்சலில் அதிக ஆர்வம் உள்ள வேதாந்த் சென்னையில் நீச்சல் பயிற்சி பெற்றார். பள்ளி அளவில், மாவட்ட அளவில் நடந்த பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். முதன் முறையாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வரும் சர்வதேச ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார். இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட வேதாந்த் 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றார்.
"நாட்டுக்காக என் மகன் பெற்ற முதல் பதக்கம்" என்று மகிழ்ந்திருக்கிறார் மாதவன். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது: தாய்லாந்தில் நடந்த 2018-ம் ஆண்டுக்கான தாய்லாந்து ஏஜ் குரூப் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் எனது மகன் வேதாந்த் இந்தியாவின் சார்பில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். நாட்டுக்காக வேதாந்த் வென்றுள்ள முதல் பதக்கம் இதுவாகும். இதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவருக்கும் நன்றி, உங்களின் ஆசிகள் என் மகனுக்கு தேவை எனப் பதிவிட்டுள்ளார்.