சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் |
தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் அல்லு அர்ஜுன். அவருக்கும் தெலுங்குத் திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மகேஷ் பாபு, பவன் கல்யாண், ராம் சரண், ஜுனியர் என்டிஆர் அளவிற்கு அல்லு அர்ஜுனும் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தும் நடிகர்.
அவர் தற்போது 'நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தின் வசன டீசர் ஒன்றை நேற்று வெளியிட்டார்கள். அதில் ஒருவர் 'டேய் சௌத் இந்தியா .........' என்ற கெட்ட வார்த்தையில் திட்டுகிறார். அதற்கு அல்லு அர்ஜுன், “சௌத் இந்தியா, நார்த் இந்தியா, ஈஸ்ட்...வெஸ்ட்...ன்னு அத்தனை இந்தியா இல்ல எனக்கு, ஒரே ஒரு இந்தியா தான்,” என பன்ச் வசனம் பேசுகிறார். அதற்காக நேற்று சமூக வலைத்தளங்களில் அல்லு அர்ஜுன் வசமாக சிக்கிக் கொண்டார்.
படத்தில் இப்படி ஒரு டயலாக் பேசுபவர் அவருடைய டிவிட்டரில் மட்டும் எதற்கு 'சௌத் இந்தியன் ஆக்டர்' என பயோடேட்டா வைத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்புகிறார்கள். பலர் தன்னை 'டிரோல்' செய்தாலும் டிவிட்டரில் அதை இன்னும் நீக்காமலே வைத்திருக்கிறார் அல்லு அர்ஜுன்.