இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாளத்தில் தயாராகி வரும் படம் ஒரு அடார் லவ். ஓமர் லுலு இயக்கும் இந்த படம் கல்லூரி காதல் கதையில் உருவாகிறது. ரோஷன் அப்துல் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் 18 வயதான பிரியா பிரகாஷ் வாரியர் நாயகியாக அறிமுகமாகிறார்.
இந்த படத்தின் டீசர் காதல் தின ஸ்பெசலாக வெளியானது. அதில், தனது கண்ணசைவால் பிரியா வாரியர் கொடுத்திருந்த பர்பாமென்ஸ் இணைய தளத்தில் வைரலாகியது. அதனால் இப்போது அவருக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் உருவாகி விட்டனர். அவரை டுவிட்டரில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் எகிறிக்கொண்டேயிருக்கிறது.
மேலும், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் இந்த மலையாள படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறார்கள். ஆக, ஒரு கண்ணசைவால் ஒரு சிறிய படத்தை நான்கு மொழிகளிலும் வெளியாகும் மெகா படமாக்கி விட்டார் பிரியா பிரகாஷ் வாரியர்.