தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் சர்வம் தாள மயம். இதில் ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்ணா முரளி, நெடுமுடி வேனு, வினீத், குமாரவேல் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். மின்ஸ் ஸ்கிரீன் சார்பில் லதா மேனன் தயாரிக்கிறார்.
இது முழுக்க முழுக்க இசையை அடிப்படையாக கொண்ட படம். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் வரும் மியூசிக்கல் சப்ஜெக்ட் படம். ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்திற்கு ஆர்ப்பாட்டமே இல்லாமல் தனித்துவமான இசையை உருவாக்கி இருக்கிறார். சென்னை, கேரளா மற்றும் மேகாலயாவில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது.
இந்தப் படத்தில் மற்றொரு சிறப்பம்சம் என்ன வென்றால், படத்திற்கு டப்பிங் கிடையாது எல்லா கேரக்டர்களுமே வசனத்தை நடிக்கும்போதே நேரடியாக பேசி உள்ளனர். அதேபோல பல காட்சிகளுக்கான பின்னணி இசையை ஏ.ஆர்.ரகுமான் முன்பே கம்போஸ் செய்து கொடுத்து விட்டார். அதையும் இயற்கை இசையோடு இணைத்து பதிவு செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ் படங்களில் கமல் இதனை கையாண்டார் . தற்போது புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்தப் படத்தில் இன்னும் நுட்பமாக கையாண்டிருக்கிறார்கள்.