பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காமன்வெல்த் போட்டியில், பளுதூக்குதலில், தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் பழனிசாமி, சச்சின் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், இரண்டாம் முறையாக பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றிருக்கும் வேலுரைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு வாழ்த்துக்கள்!! அவருக்கு தேவையான உதவிகளை வெற்றி பெறுவதற்கு முன்னரே மாநில அரசு செய்திருக்க வேண்டும். நமது அணி இது போன்ற வெற்றிகளைக் குவித்திட உதவிகள் செய்வது நம் கடமை!