'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினி படத்திற்கு முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் தீவிர ரசிகரான மலையாள நடிகர் வினீத் சீனிவாசன், அதே அளவுக்கு அஜித்தின் தீவிர ரசிகரும் கூட. சமீபத்தில், தனது மனைவி குழந்தையுடன் அஜித்தை சந்தித்துள்ளார் வினீத் சீனிவாசன்.
இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, “அற்புதமான ரசிக தருணம் இது. என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும் இது எனக்கு எத்தனை முக்கியமான நிகழ்வு என்று' என பரவசத்துடன் குறிப்பிட்டுள்ளார் வினீத் சீனிவாசன்.
அதுமட்டுமல்ல, அஜித்தை பதினெட்டு வருடங்களுக்கு முன் அதாவது 2௦௦௦-த்தில் முதன்முதலாக சந்தித்தபோது தன்னுடன் பேசியதை இப்போதும் மறக்காமல் அஜித் நினைவுபடுத்தியது தன்னை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டுசென்று விட்டது எனவும் சிலாகித்துள்ளார் வினீத் சீனிவாசன்.