துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் சினிமா ஸ்டிரைக் முடிந்ததும் சிறுத்தை சிவா உடன் அஜித் நான்காவது முறையாக இணையும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கவிருக்கிறது.
இந்த படத்திற்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டுள்ளன. அஜித்துக்கு ஜோடியாக நயன்தயாரா நடிக்கும் இந்தப்படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகிய மூவரும் காமெடியளன்களாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இந்நிலையில் இப்போது நடிகர் 'போஸ்' வெங்கட்டும் விசுவாசம் படத்தில் நடிக்க உள்ளார். இவர் ஏற்கெனவே அஜித் நடித்த 'வீரம்' படத்தில் வில்லனுக்கு டப்பிங் பேசியுள்ளார். ஆனால் இதுவரை அஜித்துடன் இணைந்து நடித்ததில்லை. அந்த குறை 'விசுவாசம்' படத்தில் நடிப்பதன் மூலம் நிறைவேறுகிறது.
விசுவாசம் படத்தில் வில்லனுக்கு நம்பிக்கைக்குரிய அடியாள் வேடத்தில் நடிக்கிறார் போஸ் வெங்கட். கவண் படத்துக்குப் பிறகு போஸ் வெங்கட்டுக்கு முக்கியமான படமாக விசுவாசம் இருக்குமாம்.