எல்லோருக்கும் மரண தண்டனை : வரலட்சுமி | இரும்புத்திரை ரிலீஸில் குழப்பம்? | காட்டேரியில் 4 கதாநாயகிகள் | துல்கருக்கு ஜோடியாக 4 ஹீரோயின்கள்? | காலா ஜூன் மாதத்துக்கு தள்ளிப்போனது ஏன்? | கரு படத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடை... ஏன்? | பக்ருவுக்கு மீண்டும் ஒரு கின்னஸ் விருது | சித்திக்கும் ஏப்ரல் சென்டிமென்ட்டும் | மேக்கப் மேன் பிறந்தநாளுக்கு கார் பரிசளித்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் | விரைவில் வெளிவர இருக்கும் படங்கள் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், பிரபுதேவா நடித்துள்ள படம் மெர்க்குரி. சைலண்ட் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்தை ஏப்., 13-ம் தேதி ரிலீஸ் செய்ய போவதாக கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடந்து வருவதால் கார்த்திக் சுப்பராஜின் முடிவுக்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படத்தை வெளியிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் எதிர்ப்புக்கு பணிந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வரும் போராட்டத்திற்கு நான் உட்பட எனது மெர்க்குரி படக்குழு ஆதரவு தெரிவிக்கிறோம். பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை மெர்க்குரி படம் தமிழகத்தில் வெளியாகாது என நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். விரைவில் ஒரு நல்ல முடிவு ஏற்படும் என நம்புகிறோம் என தெரிவித்திருக்கிறார்.