துல்கருக்கு ஜோடியாக 4 ஹீரோயின்கள்? | காலா ஜூன் மாதத்துக்கு தள்ளிப்போனது ஏன்? | கரு படத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடை... ஏன்? | பக்ருவுக்கு மீண்டும் ஒரு கின்னஸ் விருது | சித்திக்கும் ஏப்ரல் சென்டிமென்ட்டும் | மேக்கப் மேன் பிறந்தநாளுக்கு கார் பரிசளித்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் | விரைவில் வெளிவர இருக்கும் படங்கள் | மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்! | சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்! | ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு! |
கடந்த 2௦17ஆம் வருடத்திற்கான கேரள அரசின் சிறந்த நடிகர் விருது முக்கிய நடிகர்கள் யாருக்கும் கிடைக்காமல் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான இந்திரன்ஸ் என்பவருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த விருதுக்கு இவர் தகுதியானவர் அல்ல என சர்ச்சையான கருத்துக்களை கூறியுள்ளார் 'செக்ஸி துர்கா' பட இயக்குனர் சணல் குமார் சசிதரன். எப்போதும் சர்ச்சை கருத்துக்களால் சிக்கலை இழுத்துக் கொள்ளும் இவர், சமீபத்தில் ஒரு பேட்டியின்போது இப்படி சொல்லப்போக, அவர் மீது கண்டனங்கள் தொடர்ந்து பாய்ந்த வண்ணம் இருக்கின்றன.
ஆனால் உடனே, தான் கூறிய கருத்துக்காக நடிகர் இந்திரன்சிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் சணல்குமார் சசிதரன். மேலும் தான் இந்திரன்ஸ் பற்றி குறைவாக எதுவும் சொல்லவில்லை என்றும், தான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்றும் விளக்கம் கூறியுள்ளார்.