பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இன்செப்ஷன், டார்க்நைட் போன்ற உலக புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். இவர் பிலிம் கெரிடேஜ் பவுண்டேசன் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நேற்று மும்பை வந்தார். அந்த நிகழ்ச்சியில் பிலிம் தொழில்நுட்பத்தில் படமெடுப்பதை தொடருவது பற்றிய தனது கருத்துக்களை அவர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மும்பை சென்ற கமல்ஹாசன், கிறிஸ்டோபர் நோலனை சந்தித்துள்ளார். இதுகுறித்து கமல் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, "மதிப்பிற்குரிய கிறிஸ்டோபர் நோலனை சந்தித்தேன். அப்போது அவரது டன்கிரிக் படத்தை தியேட்டரில் பார்க்காமல் டிஜிட்டலில் பார்த்தமைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். அதற்குப் பதிலாக 'ஹேராம்' படத்தின் டிஜிட்டல் பிரதியை அவரிடம் கொடுத்துள்ளேன். எனது பாபநாசம் படத்தை பார்த்ததாக அவர் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது". என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார் கமல்.