மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சின்னத்திரையில் ஏகப்பட்ட பிரியாக்கள் இருக்கிறார்கள். என்றாலும் ஜோடி பிரியா கொஞ்சம் அதிகமான பிரபலம். ஜோடி நிகழ்ச்சியில் கலக்கு கலக்கு என்று கலக்கியதால் பெயருக்கு முன்னால் ஜோடி ஒட்டிக் கொண்டது. அதன் பிறகு சரவணன் மீனாட்சி உள்பட பல சீரியல்களிலும் நடித்தார். கொஞ்ச நாட்களாக சின்னத்திரை பக்கம் பார்க்கமுடியவில்லை. விசாரித்தால் பொண்ணுக்கு இப்பதான் கல்யாணம் நடந்திருக்கிறது.
திருமணத்தை நெருக்கமானவர்களை வைத்து நடத்தி விட்டு அதன்பிறகு அறிவிப்பதுதான் இப்போது சின்னத்திரை நடிகைகளின் டிரண்டிங். அந்த வகையில் ஜோடி பிரியாவும் இப்போதுதான் திருமணம் பற்றி வாய் திறந்திருக்கிறார்.
மாப்பிள்ளை பெயர் சுந்தர். லண்டன் ரிட்டன். தற்போது சென்னையில் பிரபலமான கார் கம்பெனியில் அதிகாரியாக இருக்கிறார். இது பெற்றோர் பார்த்து முடித்து வைத்த அரேன்ஜ்டு மேரேஜ். சில வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நடத்திருக்கிறது. திருமணம் முடிந்த கையோ டு தாய்லாந்திற்கு தேனிலவும் சென்று விட்டு வந்து விட்டார் ப்ரியா. விரைவில் மீண்டும் சின்னத்திரையில் தன் பயணத்தை தொடரவிருக்கிறாராம்.