பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'இவன் தந்திரன்' படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கி வரும் படம் 'பூமராங்'. அதர்வா, மேகா ஆகாஷ், உபன் பட்டேல், இந்துஜா முக்கிய ரோலில் நடிக்கின்றனர். அதர்வா மூன்று விதமான மாறுபட்ட ரோல்களில் நடிக்கிறார்.
படத்தில் ஒரு கெட்-அப்புக்காக அவர், ப்ரோஸ்தடிக் எனப்படும் செயற்கையான உருவத்தை மாற்றும் மேக்கப் செய்துள்ளார். இதற்காக அவர் பல மணிநேரம் கஷ்டப்பட்டு மேக்கப் போட்டிருக்கிறார்.
பத்மாவத், மாம், அமிதாப் பச்சன், ரிஷி கபூர் நடித்த 102 நாட் அவுட் ஆகிய படங்களில் தங்களது சிறப்பான ப்ரோஸ்தடிக் மேக்கப்பால் புகழ்பெற்ற ப்ரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா, இந்தப்படத்தில் பணியாற்றி உள்ளார்கள்.
'மசாலா பிக்ஸ்' நிறுவனம் சார்பில் பூமராங் படத்தை கண்ணனே இயக்கி தயாரிக்கிறார். இது ஒரு ஆக்ஷ்ன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.