பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி, தனது கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். கூடவே தன் விஸ்வரூபம் 2 படத்தையும் ரிலீஸ் செய்யும் வேலைகளிலும் இறங்கி உள்ளார்.
இத்தனை வேலைகளுக்கு நடுவே தன் மகள்களுடனுடம் நேரத்தை செலவிட்டு வருகிறார். நேற்று அவர் தன் டுவிட்டரில் தன் இளைய மகள் அக்ஷ்ராஹாசன் உடன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போட்டோ ஒன்றை பதிவிட்டு அதில் அக்ஷ்ராவுக்கு அறிவுரையும் வழங்கி உள்ளார்.
ஜிம்மில் என் குழந்தையுடன் உடற்பயிற்சி செய்கிறேன். உடற்பயிற்சி செய்தால், உன் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். வலுவான உடல், வலுவான சிந்தனையை கொடுக்கும் என்று டுவிட்டரில் கமல் பதிவிட்டிருக்கிறார்.