ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்தியத் திரையுலகில் தெலுங்குப் படங்கள் மூலம் தனி முத்திரை பதித்தவர் என்.டி.ஆர் என அன்பாக அழைக்கப்படும் என்.டி.ராமராவ். தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழிலும் பிரமாதமாகப் பேசப்பட்ட சில படங்களில் நடித்தவர். கிருஷ்ணர் வேடம் என்றாலே என்டிஆர்-தான் என்று சொல்லப்படும் அளவிற்கு பல படங்களில் கிருஷ்ணர் ஆக நடித்தார். தமிழில் 'கர்ணன்' படத்தில் கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் என்டிஆர் நடித்தது இன்றைக்கும் மறக்க முடியாத ஒன்று.
தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்து மூன்று முறை ஆந்திரப்பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர். அவருடைய 72வது வயதில் 1996ம் ஆண்டு உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவர் ஆரம்பித்த தெலுங்கு தேசக் கட்சிதான் இன்றைக்கும் ஆந்திராவில் ஆட்சியில் உள்ளது.
அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாகப் போகிறது என்று நீண்ட நாட்களாகவே சொல்லப்பட்டு வந்தது. அதை நாளைதான் ஆரம்பிக்க உள்ளார்கள். நாளை ஐதராபாத்தில் 'என்டிஆர்' படத்தின் துவக்க விழா நடைபெற உள்ளது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நாளைய விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகரராவ் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
என்டிஆர் வேடத்தில் அவருடைய மகன் பாலகிருஷ்ணா நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை வித்யாபாலன் நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தை தேஜா இயக்க உள்ளார். 'பாகுபலி' இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.
சாவித்ரி வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு முடிந்த நிலையில், தற்போது என்டிஆர் வாழ்க்கை வரலாறு ஆரம்பமாக உள்ளது.