சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
வெற்றிமாறன் இயக்கும் 'வட சென்னை', கௌதம்மேனன் இயக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா', பாலாஜி மோகன் இயக்கும் 'மாரி-2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். அதோடு அவரது நடிப்பில், 'The Extraordinary Journey of Fakir' என்ற இங்கிலீஷ் படமும் உருவாகி வருகிறது.
இந்தப்படங்கள் எல்லாம் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'நீடி நாடி ஒகே கதா' என்ற படத்தின் தமிழ் ரீ-மேக்கில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதோடு தாணு இந்தப்படத்தை தயாரிப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதை தாணு மறுத்துள்ளார்.
லேட்டஸ்ட்... தகவல்... இந்தப்படத்தை ஸ்கெட்ச் பட இயக்குநர் விஜய்சந்தர் இயக்க திட்டமிட்டுள்ளாராம். ஹீரோ சாய்ஸில் முதலிடத்தில் இருப்பவர் சிம்பு என தகவல் வெளியாகி உள்ளது.