ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அழகும், திறமையும் மட்டும் இருந்தால் போதாது சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவும், ஜெயிக்கவும் அதிர்ஷ்டமும் தேவை என்பார்கள். அதற்கேற்பவே அழகும், திறமையும் இருந்தும் தொடர்ந்து வாய்ப்புக்காகவும், வெற்றிக்காகவும் போராடிக் கொண்டிருப்பவர் மீனாட்சி தீட்சித். லைப் ஸ்டைல் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி.
அதன்பிறகு அலெக்சாண்டர் தி கிரேட் மலையாளப்படத்தில் நடித்து கவனம் பெற்றார். விருதகிரி மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு பில்லா இரண்டாம் பாகம், தெனாலிராமன், பயம் ஒரு பயணம் என அவர் நடித்த எல்லா தமிழ் படங்களுமே தோல்வி அடைந்தது. குறிப்பாக அவர் வடிவேலுக்கு ஜோடியாக தெனாலிராமன் படத்தில் நடித்தது அவருக்கு பின்னடைவாக அமைந்தது.
சினிமாவில் அறிமுகமாகி 9 ஆண்டுகள் ஆகியும் 15 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மியூசிக் ஆல்பங்களில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தமிழில் தீவிரமாக வாய்ப்பு தேடி வருகிறார். தனது தற்போதைய படங்களை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், மீடியாக்களுக்கு அனுப்பி வைத்து வாய்ப்பு தேடுகிறார்.