ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பவர் நடிகை லட்சுமி ராய். சமீபத்தில், ஜூலி 2 படம் மூலம் ஹிந்தியிலும் கால் பதித்தார். தற்போது நீயா 2 படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், டுவிட்டரில் ரசிகர் ஒருவர் லட்சுமி ராய்க்கு வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். அதில், "என்னிடம் ஐந்து ஏக்கர் நிலம், தோட்டத்துடன் அழகிய வீடு, ஒரு ஸ்கூட்டர் உள்ளது. உங்கள் மீது அளவுகடந்த காதலும் உள்ளது, தயவு செய்து எனக்கு பதிலளியுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு லட்சுமி ராய், சிரித்தபடி, உங்கள் காதலை தெரிவித்ததற்கு நன்றி. தற்போது திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை. உங்களுக்கு அழகிய மனைவி கிடைக்க வாழ்த்துகள் என்று டுவிட்டரில் பதில் அளித்திருக்கிறார்.