பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
புதியவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் "அமுதா". சதர்ன் ப்லிம் பேக்டரி சார்பாக சபீக் தயாரிப்பில் பி.எஸ்.அர்ஜுன் இயக்கியிருக்கும் படம் இது. மியூக்கல் திரில்லர் படமான இதில் புதுமுகம் ஸ்ரேயா ஸ்ரீ ஹீரோயினாக அறிமுகமாகிறார். அமுதா என்ற டைட்டில் கேரக்டரில் நடித்துள்ளார்.
இவருடன் அனீஸ் ஷா, லெவின் சைமன் ஜோசப், ஆஷ்னா சுதிர் மற்றும் அசிஸி ஜிப்சன் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜேஸ் பனங்கட் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அருண் கோபன் இசையமைத்திருக்கிறார். படம் பற்றி இயக்குனர் அர்ஜுன் கூறியதாவது:
இயக்குநர் மணிரத்னத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் 'அமுதா' என்கிற பெயரைத்தான் இப்படத்திற்கான தலைப்பாக வைத்திருக்கிறோம். காரணம், படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் சாதாரணமாக இல்லாமல், இதற்கு முன்பே நன்கு அறியப்பட்ட பெயராக இருக்க வேண்டும் என விரும்பினோம்.
நிச்சயமாக இது பேய்ப்படம் இல்லை. அதே நேரத்தில் பேய்ப்படத்தில் எந்தளவிற்கு திகிலும், திருப்பங்களும் இருக்குமோ அதை விட அதிகமாகவே இந்தப் படத்தில் இருக்கும். படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.