டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜீவன் நடித்த 'ஜெயிக்கிற குதிரை' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சாக்ஷி அகர்வால்.. இவர், வரும் ஏப்ரல் மாதத்தை ரொம்பவே ஆவலுடனும், சந்தோஷத்துடனும் எதிர்பார்த்து வருகிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் தான் இணைந்து நடித்துள்ள 'காலா' படம் வரும் ஏப்-27ல் ரிலீஸாக இருப்பது ஒரு காரணம்.
அடுத்ததாக மலையாளத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ள 'ஓராயிரம் கினாக்கள்' என்கிற படமும் வரும் ஏப்-6ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்தில் கதாநாயகனாக பிஜுமேனன் நடிக்க அவரது மனைவியாக நடித்திருக்கிறார் சாக்ஷி அகர்வால். ஆக, மொழிக்கு ஒன்றாக தனது படம் ரிலீசாவதால் இரண்டு மொழிகளிலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கிறாராம் சாக்ஷி அகர்வால்.