அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் படத்துக்குப்படம் பின்னணி பாடி வந்தவர் விஜய். ஒருகட்டத்தில் பாடுவதை நிறுத்தினார். அந்த வகையில், சச்சின் படத்திற்கு பிறகு 7 ஆண்டுகளாக பாடாமல் இருந்த விஜய், துப்பாக்கி படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கூகுள் கூகுள் பாடலை ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடினார். அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது.
ஜில்லாவில் கண்டாங்கி, கத்தியில் செல்பி புள்ள, தெறியில் செல்ல குட்டி என ஹிட் பாடல்களை பாடியவர், தற்போது தான் நடித்து வரும் 62வது படத்திலும் ஒரு பாடல் பாடப்போகிறார். இதுவரை ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடாத விஜய், இந்த படத்தில் முதன் முறையாக பின்னணி பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, விஜய் ரசிகர்களுக்கு இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான்-விஜய் கூட்டணியில் ஒரு தெறிக்கும் பாடல் காத்திருக்கிறது.