ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் தனது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாதவன், தொடர்ந்து ஓய்வெடுத்து வருகிறார். இதன்காரணமாக, சைப் அலிகான் உடன் நடிக்கும் வரலாற்று படத்தில் இருந்து வெளியேறிய அவர், அதன்பிறகு டெம்பர் இந்தி ரீமேக்கில் நடிக்கயிருந்தார்.
டெம்பர் இந்தி ரீமேக் படத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்க, சிம்பா என்ற பெயரில் தயாராகிறது. இந்த படத்தை ரோஷித் ஷெட்டி இயக்குவதால் வில்லனாக நடிப்பதில் ஆர்வமாக இருந்தார் மாதவன். ஆனால், படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனை செய்தபோது இப்போதைக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி விட்டார்களாம். அதன்காரணமாக, டெம்பர் இந்தி ரீமேக் படத்தில் இருந்து விலகியுள்ளார் மாதவன்.
"காயம் காரணமாக இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து இதயம் உடைந்து விட்டது. இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது எனக்கு பெரிய இழப்பாகும் என்று மாதவன் டுவிட்டல் தெரிவித்துள்ளார்.
மாதவன் இந்த படத்தில் இருந்து விலகியதை அடுத்து இப்போது அபிஷேக் பச்சன் அந்த வில்லன் வேடத்திற்கு கமிட்டாகியிருக்கிறார்.