வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திரா முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படம் தெலுங்கில் தயாராகிறது. தேஜா இயக்கும் இந்த படத்தில் என்டிஆரின் மகன் பாலகிருஷ்ணாவே என்டிஆர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் என்டிஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க இந்தி நடிகை வித்யாபாலனை அணுகினர். ஆனால் அவர் அதுகுறித்து எந்த பதிலும் சொல்லவில்லை.
அதன்பிறகு மீண்டும் அவரை டைரக்டர் தேஜா சந்தித்து முழுக் கதையையும் சொன்ன பிறகு கதை பிடித்திருப்பதாக கூறியிருக்கிறாராம் வித்யாபாலன். அவர் நடிப்பது என்டிஆரின் மனைவி வேடம் என்றபோதும், அவரை எதிர்த்து செயல்படக்கூடிய வேடம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், மார்ச் 29-ந்தேதி ஐதராபாத்திலுள்ள ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் என்டிஆர் வாழ்க்கை வரலாறு படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதேநாளில்தான் என்டிஆர் தனது தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.