இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'டிராபிக் ராமசாமி' என்ற படம் தயாராகி வருகிறது. டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கிறார். அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார்.
இந்தப்படத்தை எஸ்.ஏ.சியிடம் கடந்த 5 ஆண்டுகளாக உதவி இயக்குநராக பணியாற்றிய அறிமுக இயக்குநர் விக்கி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சீமான், குஷ்பு, விஜய் ஆண்டனி இந்தப் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், டிராபிக் ராமசாமி படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கும்படி விஜய்யை அவரது அப்பா எஸ்.ஏ.சி. கேட்டதாகவும் அதற்கு விஜய் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன் பிறகு குறிப்பிட்ட அந்த கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகினார்கள். பணம் வாங்கிக்கொள்ளாமல் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்திருக்கிறார் விஜய்சேதுபதி.