தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் நடிகர்கள் அரசியலில் குதித்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஆந்திராவில் பவன் கல்யாண், கர்நாடகாவில் உபேந்திரா ஆகியோர் தீவிர அரசியலில் இறங்கிவிட்டனர்.
இப்போது தெலுங்கானாவில் புதிதாக ஒரு நடிகரும் அரசியல் களத்தில் குதிக்க ஆசைப்படுகிறார். அவர் 'சிவாஜி' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த சுமன். தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளவர் சுமன்.
சமீபத்தில் அவருடைய அரசியல் ஆசை பற்றி பேசியிருக்கிறார். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் சேரத்தான் அவர் விரும்புகிறாராம். கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ் அழைத்தால் அந்தக் கட்சியில் சேருவேன் என்கிறார்.
2019ம் ஆண்டு ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் இரண்டு மாநிலங்களையும் சமாளிக்க மாநிலக் கட்சிகளுக்கு பல புதிய முகங்கள் தேவைப்படுகிறது. அதனால், சுமன் அந்தக் கட்சியில் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தெலுங்கானா, ஆந்திராவில் ஏற்கெனவே பலர் அரசியலில் குதித்து, எம்எல்ஏ, எம்பி, முதல்வர் ஆகியுள்ளார்கள். சிரஞ்சீவி அரசியல் கட்சி ஆரம்பித்து அடி வாங்கிய பிறகும் இன்னும் பலருக்கு அந்த ஆசை இருப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.