'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
இந்தியத் திரையுலகத்தில் யூ டியூபில் வெளியாகும் திரைப்பட டீசர்களில் தமிழ்த் திரைப்படங்கள்தான் இதுவரையிலும் மிகப் பெரும் சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், சமீப காலமாக தெலுங்குத் திரைப்படங்களும் தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக வளர்ந்து வருகின்றன.
இந்தியப் படங்களின் டீசர்களில் இதுவரையில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசராக விஜய் நடித்த 'மெர்சல்' டீசர்தான் இருக்கிறது. அப்படம் 10 லட்சம் டீசர்களைப் பெற்று உலக சாதனையுடன் முதலிடத்தில் இருக்கிறது. அஜித் நடித்த 'விவேகம்' படம்தான் முதன் முதலில் டீசர்களில் அதிக லைக்குகளைப் பெற்ற படமாக இருந்த்து. அந்த சாதனையை அடுத்து வந்த 'மெர்சல்' பட டீசர் முறியடித்த்து.
இப்போது 'விவேகம்' பட சாதனையை மகேஷ் பாபு நடித்து விரைவில் வெளிவர உள்ள 'பரத் அனி நேனு' பட டீசர் முறியடித்துள்ளது. 'விவேகம்' பட டீசர் சாதனையான 6 லட்சத்து 5 ஆயிரம் லைக் சாதனையைக் கடந்து 'பரத் அனி நேனு' டீசர் 6 லட்சத்து 55 ஆயிரம் லைக்குகளைப் பெற்றுள்ளது.
இந்த டீசர்தான் இப்போது 'மெர்சல்' டீசருக்கு அடுத்த இடத்தில் உள்ளது. 'மெர்சல்' சாதனையை முறியடிக்க மேலும் 3 லட்சத்து 45 ஆயிரம் லைக்குகள் தேவைப்படுகிறது. அதையும் பெற்று 'பரத் அனி நேனு' டீசர் சாதனை படைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.