ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
குழுமத்தின் நட்சத்திர நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழில் விஜய் தொலைக்காட்சியிலும், தெலுங்கில் ஸ்டார் மா டி.வியிலும் ஒளிபரப்பானது. தமிழில் கமல்ஹாசனும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் தொகுத்து வழங்கினார்கள். தற்போது இதன் இரண்டாவது சீசன் தொடங்குகிறது. தமிழில் கமல்ஹாசனே மீண்டும் தொகுத்து வழங்குகிறார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருக்கு பதிலாக நானி தொகுத்து வழங்குகிறார்.
ஜூனியர் என்.டி.ஆர் தற்போது படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் பிக்பாஸ் இரண்டாவது சீசனை நடத்தித்தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து நானி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
தெலுங்கில் தயாராகி தமிழில் வெளிவந்த நான் ஈ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நானி. தற்போது கிருஷ்ணாஜுனா யுத்தம், மற்றும் நாகார்ஜுனாவுடன் ஒரு பெயரிடப்படாத படம், ராகவ் என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார் நானி.