ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
முருகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அசோக். அதன் பிறகு பிடிச்சிருக்கு, கோழிகூவுது, காதல் சொல்ல ஆசை, உலா, உள்பட பல படங்களில் நடித்தார். கண்ணகிபுரம் சந்திப்பு, வானம் பார்த்த சீமையிலே, பிரியமுடன் பிரியா, கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படங்களில் நடித்து வருகிறார்.
அசோக் சென்னையை சேர்ந்த சரண்யாவை கடந்த 19ந் தேதி திருப்பதியில் திடீர் திருமணம் செய்து கொண்டார். சரண்யா வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். "இது காதல் திருமணம்தான். என்றாலும் பெற்றோர் சம்மதத்துடனும், ஆசியுடனும் தான் நடந்தது.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் திருமணத்தை அவசரமாக நடத்த வேண்டியது இருந்தது. அதனால் நண்பர்களை அதிகம் அழைக்க முடியவில்லை. விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறேன். நண்பர்களின் ஆசியும், வாழ்த்தும் எனக்கு எப்போதும் இருக்கும்" என்கிறார் அசோக்.