ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கில் 'யாத்ரா' என்கிற படத்தில் மறைந்த ஆந்திர முதல்வரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் கேரக்டரில் நடிக்க இருக்கிறார் மம்முட்டி. தெலுங்கு இயக்குனரான மஹி ராகவ் என்பவர் இயக்குகிறார். ஆந்திர முதல்வர் கேரக்டரில் நடித்தாலும் இந்தப்படம் தெனிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்த கேரக்டரில் முதலில் நாகார்ஜூனாவைத் தான் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால், அவர் கமர்ஷியலாக நடித்த படங்களின் தாக்கம், ஒய்.எஸ்.ஆர்., கேரக்டரை டேமேஜ் செய்துவிடும் என நினைத்து அதை தவிர்த்துவிட்டார்களாம். அதேசமயம், மம்முட்டிக்கு இருக்கும் கம்பீர இமேஜ், அவர் ஒய்.எஸ்.ஆராக மாறுவதற்கு உதவியாக இருக்கும் என்கிறார் இயக்குனர் மஹி ராகவ்.