தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு சினிமா ஸ்டிரைக் முடிந்ததும் துவங்கவிருக்கிறது என்று சொல்லப்பட்டது. இப்படத்துக்காக ஐதராபாத்தில் பல கோடி செலவில் செட் போடப்பட்டுள்ளது.
அஜித், நயன்தாரா நான்காவது முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். ஆர்.கே.சுரேஷும் சின்ன வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் மூலம் அஜித்துடன் முதன் முதலாக இணைந்துள்ள இசை அமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கான ட்யூன்களை உருவாக்கி வருகிறார். இதுவரை படத்தின் அத்தனை பாடல்களையும் ரெடி பண்ணிவிட்டார்.
இந்நிலையில் இந்த படத்தில் டி.இமானுடன் பிரபல கிட்டார் இசைக் கலைஞரான கெபா ஜெரோமியாவும் பணியாற்றுகிறார். விசுவாசம் படத்திற்காக அவர் சில சில ட்யூன்களை ரெடி செய்துள்ளார். இந்த தகவலை கெபா ஜெரோமியாவே டுவீட் செய்திருந்தார்.
இந்த தகவல் வெளியாகி வைரலானநிலையில், கெபா ஜெரோமியாவின் அந்த டுவீட் திடீரென்று டெலிட் செய்யப்பட்டது. அஜித்தின் அறிவுறுத்தல் காரமாகவே டுவீட் டெலிட் செய்யப்பட்டதாம்.