தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த 1ந் தேதி முதல் சினிமா ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த புதிய படங்களும் வெளியாகவில்லை. சென்னை தவிர்த்த மற்ற ஊர்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. சென்னை தியேட்டர்களில் தற்போது கடைசியாக வெளிவந்த நாச்சியார், கலகலப்பு இரண்டாம் பாகம் படங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான பிளாக் பேந்தர் சில தியேட்டர்களில் ஓடுகிறது. நாளை முதல் பசிபிக் ரிம் என்கிற ஹாலிவுட் படம் வெளிவருகிறது. தியேட்டர்கள் தாராளமாக கிடைப்பதால் வழக்கத்துக்கு அதிமான தியேட்டர்களில் இந்தப் படம் திரையிடப்படுகிறது. கத்துக்குட்டி என்ற படமும் நாளை மீண்டும் வெளிவருகிறது.
இதுதவிர மற்ற தியேட்டர்களுக்கு கை கொடுப்பது எம்.ஜி.ஆர் படங்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நடோடி மன்னன் படம் நாளை புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளிவருகிறது. அதேபோல உலகம் சுற்றும் வாலிபன், சிரித்து வாழ வேண்டும், ஒளிவிளக்கு, உரிமைக்குரல், அடிமைப்பெண் போன்ற படங்களும் திரையிடப்படுகிறது.