Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'காலா' சென்சார் கடிதம் தர தயாரிப்பாளர் சங்கம் மறுப்பா?

22 மார், 2018 - 12:35 IST
எழுத்தின் அளவு:
Did-Producer-council-denied-to-give-censor-clearance-certificate?

ஒரு திரைப்படத்திற்கு சென்சார் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்கத்திடமிருந்து 'கிளியரன்ஸ் லெட்டர்' அதாவது 'தடையில்லா அனுமதிக் கடிதம்' ஒன்றை தயாரிப்பாளர் சங்கம் தரவேண்டும். அந்தக் கடிதம் கிடைத்த பிறகுதான் தணிக்கை வாரியம் அந்தப் படத்தை தணிக்கை செய்வதற்கு எடுத்துக் கொள்ளும்.

அதன்படி 'காலா' படத்திற்காக அனுமதிக் கடிதம் வேண்டி தயாரிப்பாளர் சங்கத்திடம் கடந்த மாதமே கடிதம் கொடுத்துவிட்டார்களாம். ஆனால், ஸ்டிரைக்கைக் காரணம் காட்டி அனுமதிக் கடிதம் தர தயாரிப்பாளர் சங்கம் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக 'காலா' படத் தரப்பிலிருந்து குற்றம் சாட்டுகிறார்கள்.

இது சம்பந்தமாக தயாரிப்பாளர் சங்கத் தரப்பில், வரிசைப்படிதான் அனுமதிக் கடிதம் கொடுத்து வருகிறோம். அதன்படி 'காலா' படத்திற்கும் கொடுப்போம் என்று சொல்கிறார்கள்.

ஆனால், நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் 'காலா' தயாரிப்பு நிறுவனம் சார்பாக கலந்து கொண்ட பிரநிதிதி 'காலா' படத்தை ஏப்ரல் 27ம் தேதி வெளியிட முடிவு செய்துவிட்டோம். எனவே, எங்களின் அனுமதி கடிதத்தைக் கொடுங்கள், இல்லையென்றால் இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என கூட்டத்தில் பேசியிருக்கிறார். அவரது பேச்சால் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இது சம்பந்தமாக விஷால் விரைவில் ரஜினிகாந்தை சந்தித்து விளக்கமளிக்க உள்ளார் என்றும் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்டிரைக்கை மீறி 'காலா'வை வெளியிட கலகம் செய்வது யார் ?ஸ்டிரைக்கை மீறி 'காலா'வை வெளியிட ... இனி பேச்சுவார்த்தை இல்லை: விஷால் இனி பேச்சுவார்த்தை இல்லை: விஷால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Venkat Sankar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22 மார், 2018 - 17:25 Report Abuse
Venkat Sankar ரெம்ப முக்கியம் ..........
Rate this:
Senthil Vel - Dharmapuri,இந்தியா
22 மார், 2018 - 17:09 Report Abuse
Senthil Vel இதுலேயும் சிவாஜி ராவ் கேட்கவாய் ஊழலா?
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
22 மார், 2018 - 16:18 Report Abuse
s.rajagopalan ரஜினியை பிடித்திருந்தால் "வேண்டுமென்றே ரஜினிக்கு தொல்லை கொடுக்கிறார்கள். ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிரானவர்கள் சதி. பணம் போட்டவன் வயிற்றில் புளியை கரைக்கும் முயற்சி இது...." என்றெல்லாம் சொல்வீங்க....
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
22 மார், 2018 - 15:21 Report Abuse
BoochiMarunthu ரஜினி மற்றும் அவர் குடும்பம் சுயநலவாதிகள் . பணம் ஒன்றே குறிக்கோள் . நேருவை பிராமணர் என்பதால் தலையில் வைத்து ஆடியவர்கள் இப்போ அவரையே திட்டுகிறார்கள் . ஆன்மிகம் என்று பீலா விடுபவனை நம்பி நாட்டை நாசம் ஆக்காதீர்கள் .
Rate this:
tamilselvan - chennai,இந்தியா
22 மார், 2018 - 13:50 Report Abuse
tamilselvan இதிலிருந்தது என்ன தெரியுது தயாரிப்பாளர்கள் ரஜினி சுயரூபம் தெரியுது. இல்லை எவன் வீட்டில் என்ன விழந்தாலும் ரஜினி வீட்டில் விளக்கு எரியனும் இந்தனை நாளை இந்த பாம்புக்கு பால் ஊத்தி வளர்த்திங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Ispet rajavum idhaya raniyum
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  Tamil New Film Monster
  • மான்ஸ்டர்
  • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
  • நடிகை : பிரியா பவானி சங்கர்
  • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in