பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் இணைந்து அமைத்துள்ள அறக்கட்டளையின் துவக்க விழாவில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி பேசியதாவது...
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த பிறகு பொது மக்களில் ஒருவனாக போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. இங்கே நேர்மைக்காக கொடுக்க வேண்டிய விலை இன்னும் பெரிதாக உள்ளது.
போலீஸ் அதிகாரிகள் எப்போதும் பணியிலேயே இருப்பவர்கள். அவர்களுடைய குடும்பங்கள் நன்றாக இருந்தால் தான் அவர்களால் தைரியமாக வேலை செய்ய முடியும். இரவு பகல் பாராமல் வேலை செய்யும் காவல் துறையினருக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய ஒரு அறகட்டளை வேண்டும். அப்படிபட்ட அறக்கட்டளையை தான் நாங்கள் இப்போது நிறுவியுள்ளோம்.
இந்த அறகட்டளை இப்போது பணியில் உள்ள காவல் துறை அதிகாரிகளையும், ஓய்வு பெற்ற அதிகாரிகளையும் அவர்களுடைய குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளும் ஒரு அரணாக இருக்கும். இது பொது மக்களால் முன்னின்று நடத்தப்படும் ஒரு விஷயமாக இருக்கும். இப்போது இது கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு முழுவதும் வரவேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.
போலீஸ் அதிகாரிகள் தூங்காமலேயே வேலை செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பிரஷர் அதிகமாகிறது. பிரஷர் அதிகமாவதால் தான் அவர்கள் மக்களிடம் கோபப்படுகிறார்கள். அவர்களுக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் தூங்க நேரம் கொடுக்க வேண்டும்.
அவர்களுக்கு தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை கிடையாது. அவர்கள் மனதளவில் சந்தோஷமாக இருந்தால் தான் அவர்கள் நம்மோடு பேசும் போது சந்தோஷமாக பேசுவார்கள். நாம் நன்றாக வேலை செய்யும் அதிகாரிகளை புகழ்ந்து பேசுவதில்லை. ஆனால் அவர்களை பற்றி தவறாக மட்டும் தான் பேசுகிறோம். நாமும் நிறைய மாற வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
போலீஸ் அதிகாரிகளின் மனசுமை குறைய அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை
இவ்வாறு கார்த்தி கூறினார்.
இந்த அறகட்டளைக்கு நடிகர் கார்த்தி, சக்தி மசாலா, ராம்ராஜ் காட்டன், வனிதா மோகன், ஆறுமுகசாமி ஆகியோர் ரூபாய் 10லட்சம் விகிதம் 50லட்சம் அறகட்டளைக்கு நிதியாக வழங்கினர்.