ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அயோத்தியில் பிப்., 13ம் தேதி துவங்கிய விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராமராஜ்ய ரத யாத்திரை, கேரளா, கர்நாடகா உட்பட ஐந்து மாநிலங்களை கடந்து தமிழகத்திற்குள் இன்று அமைதியாக நுழைந்தது. இதற்கு தமிழகத்தில் திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், "சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு".
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.