இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்நாட்டில் தீவிர அரசியலில் இறங்கத் தயாராகி வரும் ரஜினிகாந்த், கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக, இமயலை சென்றிருந்தார். அங்கு ரிஷிகேஷ், பாபா குகை உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்றார்.
இதுவரை ரஜினிகாந்த் இமயமலை சென்ற போதெல்லாம் அவரை யாரும் பெரிதாகக் கண்டுகொண்டதில்லை. அவர் எங்கிருக்கிறார், எங்கு செல்கிறார் என்று கூடத் தெரியாது. ஆனால், நீண்ட வருடங்களுக்குப் பிறகு இமயமைலை சென்ற ரஜினிகாந்த், தினமும் எந்தெந்த இடங்களுக்குச் செல்கிறார் என்பது உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
ஆன்மிக அரசியலை ஆரம்பிக்க இருக்கும், ரஜினிகாந்தின் ஆன்மிகப் பயணம் இந்த முறை அவருக்கே அமைதியாக அமைந்திருக்காது என்று தான் சொல்ல வேண்டும். அவர் சென்ற இடங்களில் எல்லாம் ரசிகர்கள் அவருடன் இணைந்து எடுத்த பல செல்பிக்கள் வெளியாகின.
இமயமலை சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட ரஜினிகாந்த், சற்று முன் சென்னை விமான நிலையம் வந்தார்.