Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தி படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சோனம் கபூர் ஓ.கே.!

19 மார், 2012 - 10:53 IST
எழுத்தின் அளவு:

  கொலவெறி பாடல் உலகம் முழுக்க பிரபலமானதன் மூலம் தனுஷ்க்கு இந்தியில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனந்த் எல்.ராய் இயக்கும் இப்படத்திற்கு ராஞ்சா என்று பெயரிட்டுள்ளனர். காசியை பின்னணியாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு ஏற்ற கதாநாயகியை தேடி வந்தார் டைரக்டர் ஆனந்த் எல்.ராய். முன்னதாக இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பாலிவுட்டின் இளம் நடிகை சோனம் கபூர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இப்போது சோனம் கபூர் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இதுகுறித்து டைரக்டர் ஆனந்த்.எல்.ராய் கூறுகையில், படத்தின் கதைக்கும், தனுஷூக்கு ஏற்ற நல்ல அழகான பெண்ணை தேடி வந்தேன். அதற்கு ‌சோனம் கபூர் தான் சரியான பெண் என்று அவரை தேர்ந்தெடுத்தோம். இதுதொடர்பாக அவரிடமும் பேசினோம். கால்ஷீட் பிரச்னையால் முதலில் மறுத்துவிட்டார். இப்போது கால்ஷீட் பிரச்னை தீர்ந்து விட்டது.  அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார். ஜூன் முதல்வாரத்தில் படத்தின் சூட்டிங்கை ஆரம்பிக்க இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

தனுஷ் கூறுகையில், சோனம் கபூரை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. என்னை பொறுத்த வரை படத்தின் கதை நன்றாக இருந்தது, எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிற்கு போன ஒரு சில நடிகர்கள் மட்டும் தான் முத்திரை பதித்து இருக்கிறார்கள். அந்தவகையில் தனுஷ், பாலிவுட்டிலும் முத்திரை பதிப்பாரா...? பொறுத்திருந்து பார்ப்போம்...!!

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

ர. ரங்கராஜன் - New Delhi ,இந்தியா
26 மார், 2012 - 15:13 Report Abuse
 ர. ரங்கராஜன் திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். தனுஷ்விடம் திறமை உள்ளது என நான் நம்புகிறேன்
Rate this:
NAMASIVAYAM - VITUDACHALAM,இந்தியா
20 மார், 2012 - 02:44 Report Abuse
 NAMASIVAYAM You have tremendous potensial.You are an indian first.Go Forward.You will be successful.
Rate this:
சின்னவர் - chennai ,இந்தியா
19 மார், 2012 - 15:34 Report Abuse
 சின்னவர் ரெண்ட்டு பேரும் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டானுக.
Rate this:
நெல்லை சரவணன் - singapore,இந்தியா
19 மார், 2012 - 13:29 Report Abuse
 நெல்லை சரவணன் நீ ஒரு நடிகனா என்று உன்னை பார்த்து சிரித்தவர்கள், இன்று வெட்கப்பட்டு இருக்குறார்கள் ,தனுஷ் ,முக்கியமாக சிம்பு உண்மைல லூசு பையன் ஆஹிடுவான் பாரு,,நீ சாதனை மேல் சாதனை செய்து ஜெய்த்து காட்டு .....வாழ்த்துக்கள் ..........
Rate this:
Ajmalkhan - Bangalore,இந்தியா
19 மார், 2012 - 12:04 Report Abuse
 Ajmalkhan தனுஷ்க்கு இது வேண்டாத வேலை
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in