Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் தயாராகியுள்ள முதல் ஓரின பால் ஈர்ப்பாளர் படம்

20 மார், 2018 - 13:16 IST
எழுத்தின் அளவு:
First-Gay-movie-in-Tamil

ஆண்களை ஆண்களே விரும்புவதை ஓரின ஈர்ப்பாளர் என்பார்கள். இவர்களை பற்றிய படங்கள் ஆங்கிலத்தில் அதிக அளவில் வெளிவந்திருக்கிறது. ராம் இயக்கிய தரமணி படத்தில் இந்த விஷயத்தை தொட்டுச் சென்றிருப்பார். ஆண்ட்ரியாவின் கணவர் ஓர் பாலினின ஈர்ப்பாளராக இருப்பார். அவரின் உணர்வுகளை மதித்து ஆண்ட்ரியா அவரிடமிருந்து கவுரவமாக பிரிவார்.

தற்போது ஓரின பால் ஈர்ப்பாளர்களை பற்றிய ஒரு முழு நீள தமிழ் படம் தயாராகி இருக்கிறது. அதன் டைட்டில் என் மகன் மகிழ்வன் (மை சன் இஸ் கே). ஓரின ஈர்ப்பாளராக இருக்கும் தன் மகனின் பிரச்சினைகளை ஒரு தாய் எப்படி கையாளுகிறார் என்பதுதான் படத்தின் கதை. இதில் தாயாக அனுபம் குமாரும், மகனாக அஸ்வின்ஜித்தும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர அபிஷேக் ஜோசப், ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

மெல்போர்ன், நியூயார்க், கோல்கட்டா, சென்னை, ராஜஸ்தான், பிலடெல்பியா நகரங்களில் நடந்த பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, மக்களின் கவனத்தை ஈர்த்த படம். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த இரண்டாவது இந்தியன் வேர்ல்ட் பிலிம் பெஸ்டிவலில் இப்படம் திரையிடப்பட்டு சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டது. விரைவில் திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in