தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
'துப்பறிவாளன்' படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தில் சாந்தனு பாக்யராஜை கதாநாயகனாக்கி உள்ளார் மிஷ்கின். இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
'சுட்ட கதை', 'நளனும் நந்தினியும்', 'நட்புன்னா என்னானு தெரியுமா' படங்களை தயாரித்த 'லிப்ரா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இருப்பினும் முதல்பிரதி அடிப்படையில் மிஷ்கினே தயாரிக்கிறார். இந்தப்படத்தை சின்ன பட்ஜெட்டில் எடுத்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளார் மிஷ்கின்.
சமீபத்தில் தான் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், நந்தலாலா படத்தில் சாந்தனுவை தான் நடிக்க கேட்டேன், ஆனால் மறுத்துவிட்டார் என்று சொன்னபோது, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சாந்தனு, தயவு செய்து அப்படி சொல்லாதீர்கள் என கேட்டு கொண்டார்.
இந்தச்சூழலில் தனது புதிய படத்தில் சாந்தனுவுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளார் மிஷ்கின்.