டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தற்போது புதிய கெட்-அப்பிற்கு மாறியிருக்கிறார். 'தேவர் மகன், விருமாண்டி' ஸ்டைல் மீசையுடன் கமல்ஹாசன் இன்று தோற்றமளிக்கிறார். இன்று அவருடைய கட்சி அலுவலகத்திற்கு புதிய தோற்றத்தில் வந்த போது அவரது ரசிகர்கள் ஆச்சரியமடைந்தார்கள்.
கமல்ஹாசன் தற்போது புதிய படம் எதிலும் நடிக்க ஆரம்பிக்கவில்லை. 'விஸ்வரூபம் 2' படத்தை மட்டுமே முடித்துள்ளார். 'சபாஷ் நாயுடு' படத்தை அவர் தொடர்வாரா இல்லையா என்பது தெரியவில்லை. அடுத்து ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. அந்தப் படத்தின் வேலைகள் ஐதராபாத்தில் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிகிறது.
இருந்தாலும் கமல்ஹாசனின் இந்த புதிய மீசையுடனான தோற்றம் படத்திற்காகவா அல்லது சும்மா ஒரு மாற்றத்திற்காக வைத்திருக்கிறாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.