‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
திரு இயக்கத்தில் கார்த்திக்கும், அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் இணந்து நடிக்கும் படம் - ' மிஸ்டர். சந்திரமௌலி'. தனஞ்சயனின் 'பாப்டா' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், ரெஜினா கெசண்ட்ரா கதாநாயகியாக நடிக்கிறார்.
வரலட்சுமி சரத்குமார் இரண்டாவது கதாநாயகியாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். காமெடியனாக சதீஷ் நடிக்கி, 'மைம்' கோபி, விஜி சந்திரசேகர் இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
மிஸ்டர் சந்திரமெளலி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மிஸ்டர் சந்திரமௌலி' படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் உள்ள கிராபி தீவில் நடைபெற்று வருகிறது. வருகிற 30 -ஆம் தேதி வரை இப்படத்தின் படப்பிடிப்பை அங்கே நடத்தத் திட்டமிட்டு புறப்பட்டனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் 23-ஆம் தேதிக்கு பிறகு வெளிநாட்டு படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருப்பதால் மிஸ்டர் 'சந்திரமௌலி' படக்குழுவினர் சென்னை திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.
23-ஆம் தேதிக்குள் படப்பிடிப்பு முடிவடையாமல் போனால் மேலும் சில நாட்களுக்கு அங்கேயே படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் அனுமதி கேட்க உள்ளனர்.