வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ரஜினியின் காலா படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஹூமா குரேசி. இந்த படத்தில் நடித்து வந்தபோது ரஜினியின் எளிமை தன்னை வியந்ததாகவும், ஒரு மகளைப் போலவே அவர் தன்னிடம் பாசம் காட்டியதாகவும் கூறிய ஹூமா குரேசி, தனது வீட்டில் இருந்தே படப்பிடிப்பு தளத்துக்கு உணவு வரவைத்து தனக்கு ரஜினி விருந்து கொடுத்ததை பெருமையாக சொல்கிறார்.
மேலும், தமிழ் மரபு, கலாச்சாரங்களை தான் ரொம்பவே நேசிப்பதாக கூறும் ஹூமா குரேசி, காலா படத்திற்கு பிறகு தொடர்ந்து தென்னிந்திய மொழிப்படங்களில் நடிப்பதில் தான் ஆர்வமாக இருப்பதாகவும் சொல்கிறார். அதோடு, தற்போது சில தமிழ், தெலுங்குப் படங்களில் நடிப்பது குறித்து சில டைரக்டர்கள் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறும் ஹூமா குரேசி, காலாவிற்கு பிறகு மும்பையில் இருந்து தென்னிந்தியாவுக்கு இடம் பெயரவும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்.