ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழக அரசியல் களத்தில் குதிக்க இருக்கிறார். இதற்காக அவரது மக்கள் மன்றத்திற்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தனது அரசியல் பயணத்துக்கு தனது குருவிடம் ஆசி பெறுவதற்காக தற்போது இமயமலைக்கு சென்றிருக்கிறார். இமயமலை சுற்றுப் பயணம் முடிந்ததும் அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிக்கு கடும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட மரணத்தின் எல்லைக்கு சென்று திரும்பினார். சிங்கப்பூரில் உள்ள உயர்தர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்றார். அது முதல் அவர் ஆண்டு தோறும் அமெரிக்கா சென்று முழுஉடல் பரிசோதனை செய்து வருகிறார். தற்போது அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள இருக்கிறார்.
இதற்காக அவர் தனது இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா செல்ல இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகிறார்கள். இந்த முறை ரஜினியுடன் அவரது மனைவி லதா, இளைய மகள் சவுந்தர்யா ஆகியோர் உடன் செல்கிறார்கள். இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் ரஜினி அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பயணத்துக்கு பிறகு கட்சி பெயர், கொடி, சின்னத்துடன் அரசியல் களம் இறங்குவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.