மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் 'விஸ்வரூபம்-2' எப்போது ரிலீசாகும் என்றே தெரியாதநிலை இருந்தது. தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியாக 'விஸ்வரூபம்-2'வின் சென்சார் நடைபெற்று முடிவடைந்த தகவல் வெளியானது.
இப்படத்திற்கு சென்சார் குழு உறுப்பினர்கள் U/A சர்டிஃபிகட் வழங்கியிருக்கிறார்கள்.இதனை தொடர்ந்து 'விஸ்வரூபம்-2'படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகவிருக்கிறது.
திரையுலக ஸ்டிரைக் முடிந்த பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக கமல் வட்டார தகவல் தெரிவிக்கிறது. இதனால் 'விஸ்வரூபம்-2' படத்தின் பிசினஸ் விஷயங்களை தொடங்காமல் இருக்கிறார் கமல்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனாக இருந்தாலும், படத்தின் பிசினஸ் விவகாரங்களை தானே கவனிக்க தீர்மானித்துள்ளார். வியாபாரம் முடிந்த பிறகு ஆஸ்கார் ரவிக்கு சேர வேண்டிய தொகையை தருவதாக வாக்குறுதி அளித்துள்ளாராம் கமல்.