ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜெயராம் மகன் காளிதாஸ் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ள 'பூமரம்' பல சோதனைகளை கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன் தினம் ரிலீசாகியுள்ளது. இந்தப்படத்திற்கு துல்கர் சல்மான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில், நடிகர் நிவின்பாலி கொச்சியில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து இந்தப்படத்தை ரசித்துள்ளார்.
அதற்கு முக்கிய கரணம் இந்தப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் அப்ரிட் ஷைன் தான். இதற்கு முன் நிவின்பாலியை வைத்து 1983 மற்றும் ஆக்சன் ஹீரோ பிஜூ என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இந்த அப்ரிட் ஷைன்.
படத்தை பார்த்துவிட்டு தனது முகநூல் பக்கத்தில் படத்தின் சிறப்பம்சங்களையும் யதார்த்தமாக படமாக்கப்பட்டுள்ள விதத்தையும் பாராட்டியுள்ளார் நிவின்பாலி.