மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அவஞ்சர்ஸ் படம் பற்றி நம் தமிழ் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும். விவேகம் டீசர் வெளிவந்த போது அவஞ்சர்ஸ் - ஏஜ் ஆப் அல்ட்ரான்ஸ் டீசரின் லைக் சாதனையை முறியடித்து தான் விவேகம் டீசர் லைக்குகளில் உலக சாதனையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது. ஆனால், அடுத்த சில மாதங்களில் வெளிவந்த மெர்சல் டீசர் அந்த சாதனையை முறியடித்தது.
இப்போது அவஞ்சர்ஸ் - இன்பினிட்டி வார் படத்தின் இரண்டாவது டிரைலர் நேற்று வெளியிகியுள்ளது. யு டியுபில் நேற்று மாலை வெளியான இந்த டிரைலருக்கு இதுவரையிலும் 1 கோடியே 93 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. இப்படத்தின் முதல் டிரைலர் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. அந்த டிரைலருக்கு இதுவரை 15 கோடியே 34 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. அது மட்டுமல்ல 30 லட்சம் பேர் அந்த டிரைலரை லைக் செய்துள்ளார்கள். ஏப்ரல் மாதம் 27ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலருக்கு அதற்குள் மேலும் பார்வைகளும், லைக்குகளும் கிடைக்கலாம்.
அதனால், அஜித், விஜய் ரசிகர்களே உங்களுடைய அடுத்த டார்கெட் அவஞ்சர்ஸ் - இன்பினிட்டி வார் டிரைலர் சாதனையை முறியடிப்பதாக இருக்கட்டும்.