'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமுத்திரக்கனி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 2004 இல் வெளிவந்த நெறஞ்ச மனசு படத்தின் மூலம் நடிகர் சம்பத் தனது சினிமா பயணத்தை தொடங்கினர். அதை தொடர்ந்து பருத்திவீரன், தாமிரபரணி, சென்னை 28, சரோஜா, ஜில்லா போன்ற 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது காலா உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
பல்வேறு படங்கள் மற்றும் வித்யாசமான வேடங்களில் நடித்து வந்த சம்பத், தற்போது பச்சோந்தி என்ற குறும்படம் ஒன்றை இயக்கி, இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
இந்த குறும்படம் சமூகத்தில் நடக்கும் ஆண் ஆதிக்கம் பற்றியது. பெண்களை காட்சிப்பொருளாகவும், காமத்துக்கு கைக்குழந்தையாகவும் நினைக்கும் ஆண்களை பற்றி மிக சுருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஒரு அலுவலக உயர் அதிகாரி, ஒரு குடும்பத் தலைவர், ஒரு இயக்குனர் என 3 ஆண் கேரக்டர்கள் இந்த குறும்படத்தில் வருகிறார்கள். மூவருமே வெளி உலகில் நல்லவர்கள். ஆனால் உள்ளுக்குள் பெண்ணாசை பிடித்தவர்கள் என்கிறது படம்.