தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர், பி.எல்.தேனப்பன். தனது ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் மூலமாக காதலா காதலா, பம்மல் கே.சம்பந்தம், பஞ்சதந்திரம், கனா கண்டேன், துரை, அய்யனார் உள்பட பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது ராம் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் பேரன்பு படத்தை தயாரித்து வருகிறார். சமீபகாலமாக நடித்தும் வருகிறார். குரங்கு பொம்மை, பலூன், ஸ்கெட்ச், மதுரவீரன் படங்களில் நடித்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை கதீட்ரல் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் பி.எல்.தேனப்பன் காரோட்டி வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அவர் மது போதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.