தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுக்கு சொந்தமான வீட்டை ஏலத்தில் விற்க, வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.பழம்பெரும் கர்நாடக இசை பாடகி, எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஸ்ரீவித்யா. இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், 1966 முதல், 2000 ஆண்டு வரை ஏராளமான திரைப்படங்களில் நடித்து, முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, ஸ்ரீவித்யா, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், 2006ல், இறந்தார். இறுதி காலத்தில், அவரது சொத்துக்களை, மலையாள நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான கணேஷ்குமார் நிர்வகித்து வந்தார்.ஸ்ரீவித்யாவுக்கு, சென்னை அபிராமபுரத்தில் உள்ள குடியிருப்பில், 1,250 சதுர அடி பரப்பளவில் வீடு உள்ளது.இந்த வீட்டை, வருமான வரி நிலுவை காரணமாக ஏலம் விட, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.வரும், 27ம் தேதி, ஏலம் நடக்க உள்ளதாகவும், வீட்டின் ஆரம்ப விலை, 1.17 கோடி ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.